எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது!

பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த மீனவர்களது படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கைதான மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பருத்தத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply