அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலாவ பகுதியில் இருந்து 411 கிராமத்திற்கு பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாகவும், காயமடைந்தவர்கள் இன்னும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
