சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் சந்தியில் நேற்றிரவு (09) ஏற்பட்ட குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு குழுவினை சேர்ந்த ஒருவரும், மற்றைய குழுவினரை சேர்ந்த மூவரும், சமாதானப்படுத்த சென்ற முச்சக்கர வண்டி சாரதியுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மது போதையில் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
