இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள்- சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கையின் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9ஆம் திகதிகளில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு படகுகளுடன் 29 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இது தொடர்பிலான வழக்கு நேற்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்களை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

வழக்கினை ஆராய்ந்த நீதவான் அவர்களில் 26 மீனவர்களுக்கு 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன் இரண்டு படகு ஓட்டிகளுக்கும் ஒரு படகின் உரிமையாளருக்கும் 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் அவர்களுக்கு தலா 4 மில்லியன் அபராதத்தையும் செலுத்துமாறும், செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply