மன்னர் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நேற்றையதினம் நூறாவது நாளை எட்டியது.
இந்தநிலையில் நேற்றையதினம் (10) இரவு தீப்பந்த எழுச்சி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், போராட்டக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த போராட்டத்தின் போது,
மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை உடன் நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், மன்னார் தீவில் எந்த ஒரு இடத்திலும் கனிய மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
மற்றும் அமைக்கப்பட்ட 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் ஆகிய காத்திரமான 3 கோரிக்கைகளையும், அரசு தம் மக்களின் கோரிக்கையாக ஏற்றுக்கொண்டு, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் அறிவிக்கும் பட்சத்தில், எங்களுடைய மக்களின் இந்த அறவழிப் போராட்டம் நிறைவுக்கு வரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் நெற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட தீப்பந்த எழுச்சி போராட்டம் இன்று முதல் கிராமங்கள் தோறும் இடம்பெறும் என போராட்டக்குழு சார்பாக அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
