இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் உயரிய இராணுவ விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான வாகீசன் மதியாபரணம் என்பவர் கனடாவில் Order of Military Merit (M.M.M.) என்ற விருதைப் பெற்றுள்ளார்.
வாகீசன் மதியாபரணம் Order of Military Merit (M.M.M.) என்ற விருதைப்பெற்ற முதல் இலங்கைத் தமிழராக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் அவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உள்நாட்டுப் போரால் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து கனடாவுக்கு சென்ற வாகீசன் மதியாபரணம், சுமார் 30 ஆண்டுகள் கனடா இராணுவத்தில் பணியாற்றி, அண்மையில் ஓய்வு பெற்றார்.
விருதை பெற்ற வாகீசன் மதியாபரணம் கருத்து தெரிவிக்கையில்,
இந்த விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல, என் கனவின் நிறைவேற்றம்
ஏதிலியாக வந்த ஒரு தமிழ் இளைஞன், கனடா என்ற தேசத்துக்கு பணியாற்றி, இன்று அதன் உயரிய மரியாதையைப் பெறுவது பெருமையாக உள்ளதென நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
