இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு- இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை!

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் தெரிவிக்கையில்,

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு அச்சுறுத்தல் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இலங்கையின் புலனாய்வுப் பிரிவுகள் தீவிரமாக செயற்படுகின்றன. நமது பாதுகாப்புப் படைகள், குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார், தேசிய பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்துகின்றனர். எனவே, தேசிய பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை- என தெரிவித்தார்.

வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குறித்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பின்வருமாறு பதிலளித்தார்.

கேள்வி: பாதாள உலகக் குழுவினர் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறினீர்களல்லவா?

அமைச்சர்: “இல்லை, நான் அவ்வாறு கூறவில்லை. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சில குழுக்கள் அதில் இருந்து வெளியேற விரும்புகின்றன என்றுதான் கூறினேன். கடத்தலில் ஈடுபடுபவர்கள் அதிலிருந்து வெளியேற முயற்சிப்பது ஒரு நல்ல நிலைமைதான்- என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply