ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது குறித்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வினோத் என்பவரிடம் இருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினும், அவரது சகா ஒருவரிடம் இருந்து கைக்குண்டு மற்றும் வாளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
