முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (12) காலை முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் உள்ள நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நேரடி மருத்துவக் காப்புறுதிக்காக, சட்டவிரோதமாக ஒரு தனியார் தரகர் நிறுவனம் நியமிக்கப்பட்டதன் மூலம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு ரூபா 4,750,828.72 நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த காரணிகளை ஆராய்ந்ததன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம, பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply