கிளிநொச்சி பகுதியில் 26 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி – பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றின் பின் பகுதியில் இருந்து 26 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கல்லாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது நேற்றையதினம் இரவு இந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply