ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ‘லொக்கு பெட்டியின்’ இரண்டு உதவியாளர்கள் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘லொக்கு பெட்டியின்’ இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரகஸ்மன்ஹந்திய மற்றும் இந்துருவ பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான சந்தேகநபர்களிடம் இருந்து 26 இலட்சம் ரூபாய் பணம், ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் ‘Easy Cash’முறை மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வங்கி அறிக்கைகள் மற்றும் தொலைபேசி அறிக்கைகளைப் பெற்று மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான சந்தேக நபர்களை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அலுத்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply