தொல். திருமாவளவன் இலங்கை வருகை!

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சியை நடத்தவுள்ளது.

குறித்த நிகழ்வானது நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) நாளைய தினம் (14) ஆரம்பமாகி 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று (13) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைத்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply