கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு- மேலும் 2 பேர் கைது!

கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தின் 16ஆவது ஒழுங்கையில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 07ஆம் திகதி இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியது.

கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தின் 16ஆவது ஒழுங்கையில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஆணும், மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைதான ஆண் குற்றத்தைச் செய்ய துப்பாக்கிதாரி வந்த காரின் சாரதியாக இருந்தவர் என்றும், சந்தேகநபரான பெண், இந்தக் குற்றத்தைச் செய்ய சந்தேகநபர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கியவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேகநபர்களை கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

​​சம்பவத்தில் கொல்லப்பட்டவர் குற்றக் கும்பல் உறுப்பினரான ‘பூகுடு கண்ணா’ என்ற பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்பவரின் உதவியாளர் என்பது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply