வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில், 36ஆவது மலைக் கோவில் அருகில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் வீதியில் விழுந்து கிடப்பதை அவதானித்தவர்கள் வரகாபொல பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், காயமடைந்தவரை வரகாபொல வைத்தியசாலையில் அனுமதித்த நடவடிக்கை எடுத்த போதும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கணேமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வரகாபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வரகாபொல பொலிஸார் முன்னடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
