புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்ற ரசிக பீரிஸ்!

புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க 34 வருட அரச சேவைக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக நேற்றையதினம் (13) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்தார்.

சமன் ஸ்ரீ ரத்நாயக்க 2019 ஒக்டோபர் 16 அன்று தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.

நேற்றையதினம் அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து, இன்றையதினம் புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply