யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் எம்.பி அர்ச்சுனா வெளியிட்ட தகவல்!

நாட்டில் கண்சத்திர சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ளும் மருத்துவமனையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திகழ்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

கண் சுகாதாரம் தொடர்பான தேசிய கொள்கை திட்டத்தினை மேம்படுத்துவதற்கான ஒத்திவைப்பு வேளை, பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கண் சத்திர சிகிச்சை நிபுணர் முத்துசாமி மலரவன் தலைமையேற்று கண் தொடர்பான சத்திர சிகிச்சைகளை விரைவுபடுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி கண்சுகாதாரம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என அர்ச்சுனா இராமநாதன் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply