அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில்!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னடுத்துள்ளனர்.

அதன்படி வைத்தியசாலை மருத்துவ பரிசோதனையின் போது வைத்தியசாலையில் கிடைக்காத மருந்துகளைப் பெற நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை வழங்காமை, ஆய்வக சோதனைகளை வெளிப்புறமாக நடத்த பரிந்துரைகளை வழங்காமை, தினசரி மருத்துவ பரிசோதனைகளை தவிர மேலதிகமான எந்தவொரு பரிசோதனையிலும் கலந்துகொள்ளாமை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply