அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வந்தது.
இந்தநிலையில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் குழுவொன்று, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் பொருட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த பேச்சுவார்த்தை தற்போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
