ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்கக்கார!

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய குமார் சங்கக்கார வழிநடத்தலில் சஞ்சு செம்சுன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

எனினும் 2024 உலகக் கிண்ண வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார்.

ஆனால் சஞ்சு செம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை துறந்தார்.

இதனால் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வழிநடத்துவதற்காக மீண்டும் குமார் சங்கக்கார தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply