கைதான புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொலவுக்கு பிணை!

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொலவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொல இன்று (17) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சட்டவிரோத ஆட்சேர்ப்பு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைதான நபர் இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply