பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல்!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு தற்கொலை குண்டுதாரிகள், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்திற்கு சென்றுள்ளதுடன், அவர்களில் ஒருவர் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

மற்றைய நபர் இராணுவத் தலைமையக வளாகத்திற்குள் குண்டை வெடிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த 11ஆம் திகதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தற்கொலை குண்டுத் தாக்குல் நடாத்தப்பட்டது. இதன் போது 12 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply