ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழு ஒன்றினால் இன்றையதினம் (24) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், பொல்துவ நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாம் உயிரிழந்த பின்னர் தமது ஓய்வூதியத்தை எவ்வித குறைப்பும் இன்றி தமது தங்கியிருப்பாளர்களுக்கு வழங்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸ் சேவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படைவீரர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முற்பட்ட வேளையில், பொலிஸார் அவர்களைத் தடுக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
