வடக்கு எத்தியோப்பியாவில் சுமார் 12,000 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) என்ற எரிமலை திடீரென வெடித்ததால், வளிமண்டலத்தில் பெருமளவு சாம்பல் மேகங்கள் உருவாகியுள்ளது.
செங்கடல் முழுவதும் தெற்காசியாவை நோக்கி ஒரு பாரிய சாம்பல் மேகம் பரவியதால், இந்தியா மற்றும் மேற்கு ஆசியாவில் நேற்று விமானச் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
கண்ணூரில் இருந்து அபுதாபிக்குச் சென்ற விமானம் உட்பட பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
அத்துடன் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விரிவான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளனர்.
12,000 ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியாவில் வெடித்த எரிமலை காரணமாக அதன் சாம்பல் வேகமாக இந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
