தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம்- ஒருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து நேற்று (24) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு வாழைச்சேனை மற்றும் பட்டிப்பளை பகுதிகளில், தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகள் பிரதேச சபையால் அகற்றப்பட்டது.

குறித்த சம்பவத்தில் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், 7 பேர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர்களால் அகற்றப்பட்ட பெயர் பலகைகளும் வாழைச்சேனை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply