ரணில், சஜித் ஒன்றிணைவதற்குரிய சாதக சூழ்நிலை!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைவதற்குரிய சாதக சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களுன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவது தொடர்பான பொறுப்பை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார் என்று அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அதன்படி இரு தரப்பு இணைவு விரைவில் சாத்தியமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இரு தரப்பு இணைவு பற்றி ஆராய்வதற்காக இரு கட்சிகளும் ஏற்கனவே குழுக்களை அமைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply