பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து விபத்து- இளைஞன் பலி!

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

படகின் இன்ஜின் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த நிலையில், அதனை பழுதுபார்த்து பரிசோதனை செய்யச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது களப்பில் மூழ்கிய இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு சிகிச்சைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply