ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபருக்கு மீண்டும் விளக்கமறியல்!

அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்திலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் கடந்த 05ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்றையதினம் (26) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றத்துடன் தொடர்புடைய அதிபரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply