தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 71ஆவது பிறந்த தினம் இன்றையதினம் (26) வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கேக் வெட்டி, பட்டாசு கொளுத்தி கொண்டாடப்பட்டது.
தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு இனிப்பு மற்றும் மர கன்றுகள், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
தலைவரின் பிறந்ததின கொண்டாட்ட நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

