நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை- 39 அனர்த்த மரணங்கள் பதிவு!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 39 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக 17 மாவட்டங்களில் உள்ள 79 பிரதேச செயலாளர் பிரிவுகள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த அனர்த்தங்கள் காரணமாக 10 பேர் காயமடைந்துள்ளதுடன், 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் 5 பாதுகாப்பு மையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply