சீரற்ற வானிலையால் இரு நாட்களுக்கு நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாளையும் (28) நாளை மறுதினமும் (29) நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (27) நண்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி நாடாளுமன்றம் அடுத்த திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ளதுடன், திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களிலும் நாடாளுமன்றத்தை இரவு வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் அன்றைய தினத்துக்கு ஒதுக்கப்பட்ட விவாதம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணி முதல் இரவு வரை நாளை மற்றும் நாளை மறுதினம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply