இலங்கை வானிலை தொடர்பாக நாசா சமீபத்திய செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.
நாசாவின் சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள், இலங்கையின் தெற்கே ‘டிட்வா’ சூறாவளி மண்டலம் தீவிரமடைந்து வருவதையும், தீவு முழுவதும் அடர்த்தியான மேகப் பட்டைகள் பரவுவதையும் காட்டுகிறது. இந்த அமைப்பு பல மாவட்டங்களில் கனமழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயங்களை அதிகரிக்கும் என எதிர்வுகூறுகின்றது.
இலங்கையின் பல மாவட்டங்களில் கனமழை, வலுவான காற்று மற்றும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயங்களை அதிகரிக்கின்றன.
உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு குழுக்கள், ஆபத்தான பகுதிகளில் இருப்பவர்களுக்கு அவசரமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
விவசாயிகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் உள்ளோர் சாத்தியமான பாதிப்புகளைத் தடுக்கும் விதமாக எச்சரிக்கைகள் கடைபிடிக்க வேண்டும்.
இலங்கையில் நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 200 மி.மீ இற்கும் அதிகமான மிக பலத்த மழையும், திருகோணமலை, பதுளை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ இற்கும் அதிகமான மிக பலத்த மழையும் பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் மிகவும் பலத்த காற்றும், இடைக்கிடையே மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் மிக பலத்த காற்றும் வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

