ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றி தனது பதவி விலகலை அறிவித்தார்.
சுய விருப்பத்துடன் கட்சியின் முடிவுக்கு அமைய தலைமைக்கு துரோகம் இழைக்காமல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
