நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையால் நீல்வலா கங்கையின் கிளையாறான கிரம ஆர ஓயாவின் நீர் பெருக்கெடுத்ததால் மாத்தறை மாவட்டத்தில் சிறிய வெள்ள நிலைமை நிலவுவதாக மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் கம்புறுப்பிட்டிய – கத்துவ வீதி, கோதாவ பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து நடவடிக்கைகளுக்குச் சிறிய அளவில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியை அண்டியுள்ள பல தாழ்வான பகுதிகளும் நீரினால் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சிறிய வெள்ள நிலைமை படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் மாத்தறை அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
