அநுராதபுரம் – புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தின் மேல் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 70 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று சுமார் ஒன்றரை மணி நேரமாக அதே இடத்தில் நிற்பதாக இன்றைய (28) நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கிருந்த பயணி ஒருவர் தெரிவிக்கையில்,
ஒன்றரை மணி நேரம் எல்லோரையும் அழைத்தோம்.. ஒருவரும் வரவில்லை.
பயணிகளின் இடுப்பு அளவு வரை நீர் நிரம்பியுள்ளது.
தற்போது கடற்படையின் படகு மூலம் இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
