இன்றைய ரயில் சேவை தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு!

பிரதான மார்க்கத்தில் இன்றையதினம் (01) 19 ரயில் சேவைகளையும், கரையோர மார்க்கத்தில் 34 ரயில் சேவைகளையும் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி பிரதான ரயில் மார்க்கத்தில் காணப்படும் தடைகள் காரணமாக, சம்பந்தப்பட்ட ரயில்கள் கொழும்பு கோட்டையிலிருந்து எம்புல்தெனிய வரைக்கும், எம்புல்தெனியவிலிருந்து கொழும்பு கோட்டை வரைக்கும் மாத்திரமே இயக்கப்படவுள்ளன.

அத்துடன், புத்தளம் மார்க்கத்தில் 18 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளதுடன், குறித்த ரயில் சேவைகள் கொழும்பு கோட்டையிலிருந்து நீர்கொழும்பு கொச்சிக்கடை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் களனிவெளி மார்க்கத்தில் 10 ரயில் சேவைகளை இயக்கவும் ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply