வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு புதிய உறுப்பினர் தெரிவு!

வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக நெய்யா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹீர் பெயரிடப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றிய முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது அண்மையில் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து குறித்த நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியிருந்தது.

அதன்படி நிலவிய குறித்த வெற்றிடத்துக்கு நெய்யா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹீர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பெயரிடப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் இந்தப் பெயர் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply