புதிய நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றிய முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது அண்மையில் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து குறித்த நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியிருந்தது.

அதன்படி நிலவிய குறித்த வெற்றிடத்துக்கு நெய்யா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹீர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பெயரிடப்பட்டிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் இந்தப் பெயர் நியமனம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply