கிண்ணியா பகுதியில் மீட்கப்பட்ட 36 கைக்குண்டுகள்!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள கண்டல் காடு பகுதியில் 36 கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது.

மாவிலாறு குளம் உடைப்பெடுத்ததை அடுத்து கிண்ணியா பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது.

எனினும் தற்போது வெள்ள நீர் வழிந்தோடி வரும் நிலையில், அந்த பகுதியை சுத்தம் செய்யும் போதே கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு அங்கு வரவழைக்கப்பட்டு, கைவிடப்பட்டிருந்த 36 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டது.

பின்னர் நீதிமன்ற உத்தரவை பெற்று அவற்றை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிசர் தெரிவித்தனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply