அரச பேருந்துகளில் ரயில் மாதாந்த பருவச்சீட்டை பயன்படுத்த அனுமதி!

ரயில் மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை போக்குவரத்து சபையின் அதி சொகுசு பேருந்துகள் தவிர்ந்த ஏனைய சாதாரண பேருந்துகளில் ரயில் மாதாந்த பருவச்சீட்டைப் பயன்படுத்தி போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பேருந்து ஊழியர்கள் மற்றும் குழுவினருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply