கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டிய வரையிலான ரயில் சேவைகள் வழமைக்கு!

கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டிய வரை ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் புத்தளம் மார்க்கத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் குறித்த பாதையிலான ரயில் போக்குவரத்து கொழும்பு கோட்டையிலிருந்து கொச்சிக்கடை ரயில் நிலையம் வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது புத்தளம் மார்க்கத்தில் கொச்சிக்கடை மற்றும் நாத்தாண்டிய ஆகிய பகுதிகளுக்கு இடையிலான சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டிய வரை ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் ரயில் பாதைகளுக்கு கடும் சேதங்கள் ஏற்பட்டது. எனினும் தற்போது சேதமடைந்த பல இடங்களில் மீண்டும் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply