பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் பாரிய விபத்து- 5 பேர் வைத்தியசாலையில்!

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளவத்தை திசையிலிருந்து கொழுப்பிட்டி நோக்கிச் சென்ற லொறி ஒன்று, வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் வாகனங்களுடன் மோதிய பின்னர் குறித்த லொறி ரயில் வீதியை நோக்கிச் சென்று, இறுதியாக ரயில் தண்டவாளத்தில் நின்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply