கற்பிட்டி கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட பெருமளவான போதைப்பொருள்!

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது.

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்டனர்.

இதன்போது 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த படகின் உரிமையாளர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply