பனாமுரே – மித்தெனியா வீதியின் லெல்லவல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த 27 மற்றும் 36 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் இருவரும் கார் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த வேளையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நபர்களிடம் இருந்து 190 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பனாமுரே பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
