நாட்டில் நிலவிய அனர்த்த நிலமை- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635ஆக உயர்வு!

நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனர்த்தங்களால் 192 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவிய சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அங்கு 234 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 89 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 90 மரணங்களும், குருநாகலில் 61 மரணங்களும், கேகாலை மாவட்டத்தில் 32 மரணங்களும், புத்தளத்தில் 37 மரணங்களும் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 28 மரணங்களும் பதிவாகியுள்ளன.

மேலும் 22,218 குடும்பங்களைச் சேர்ந்த 69,861 நபர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply