நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 638ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அனர்த்தங்களால் 191 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலவிய சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு 501,958 குடும்பங்களைச் சேர்ந்த 1,737,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின் படி, அதிகளவான மரணங்களாக 234 மரணங்கள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில் நுவரெலியா மாவட்டத்தில் 89 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 90 மரணங்களும், குருநாகலில் 61 மரணங்களும், கேகாலை மாவட்டத்தில் 32 மரணங்களும், புத்தளத்தில் 37 மரணங்களும் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 28 மரணங்களும் பதிவாகியுள்ளன.
அத்துடன் 20,373 குடும்பங்களைச் சேர்ந்த 63,628 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 5,354 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதுடன், 81,621 வீடுகளுக்குப் பகுதியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
