டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனால் நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.
அதன்படி மன்னார் மாவட்டத்தின், நானாட்டான்-அறுவைக்குண்டு மற்றும் உப்புக்குளம், கொந்தைப்பிட்டி ஜென்னத் நகர் பிரதேச மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணம் நேற்று (09) வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது பிரதேசங்களின் மதஸ்தலங்களின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
