மண்சரிவு எச்சரிக்கை- தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்பு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளன.

தற்போது நிலவும் வானிலை முன்னறிவிப்புகளுக்கு அமைய 4 மாவட்டங்களில் உள்ள 40 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவிக்கையில்,

இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகள் கண்காணிக்கப்பட்டு, வீட்டு உரிமையாளர்களுக்கு அதன் அபாய நிலை குறித்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அந்த நபர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முழு பிரதேச செயலகப் பிரிவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக இதில் கூறப்படவில்லை. அங்கு பாதுகாப்பான இடங்களும் உள்ளன.

தமது வீடு மண்மேடு ஒன்றிற்கு அருகில் அமைந்திருந்தால், அந்த மக்கள் கண்டிப்பாக அவதானமாக இருக்க வேண்டும். மழைவீழ்ச்சியில் ஏதேனும் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டால் எச்சரிக்கையாக இருக்கவும். ஏனெனில் நாம் மலைகளை அண்டிய பகுதிகளில் வாழ்கிறோம் என்றாலே அங்கு ஒரு வித ஆபத்தான நிலை காணப்படுகிறது.

மண்சரிவுகளினால் 458 மரணங்கள் பதிவாகியுள்ளன. மண்மேடு சரிவுகள் மற்றும் மண்சரிவுகள் 698 சம்பவித்துள்ளன. 37 பாறை புரளல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன- எனத் தெரிவித்தார்.

இதேவேளை, 2ஆம் கட்டத்தின் கீழ் 5 மாவட்டங்களில் உள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவதானத்துடன் இருக்குமாறு விடுக்கப்பட்ட அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

1ஆம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு 3 மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பும் அமுலில் உள்ளது.

எதிர்காலத்தில் பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து இந்த நிலைமைகள் மாறக்கூடும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செல்லுபடியாகும் காலம்: 2025.12.09 பிற்பகல் 4.00 மணி முதல் 2025.12.10 பிற்பகல் 4.00 மணி வரை.

எச்சரிக்கை மட்டம் 3 – வெளியேறுங்கள் (சிவப்பு)

கண்டி மாவட்டம்:

உடுநுவர
கங்கவட்ட கோரளை
உடுதும்பர
தொழுவ
மினிப்பே
பாதஹேவாஹெட்ட
மெததும்பர
தெல்தோட்டை
அக்குறணை
கங்க இஹல கோரல
பாததும்பர
யட்டிநுவர
தும்பனை
உடுநுவர
ஹாரிஸ்பத்துவ
பூஜாப்பிட்டிய
பஸ்பாகே கோரல
பன்வில
ஹதரலியத்த
குண்டசாலை

கேகாலை மாவட்டம்:

மாவனெல்லை
ரம்புக்கனை
அரநாயக்க
புலத்கொஹுபிட்டிய
கலிகமுவ
யட்டியந்தோட்டை
வரகாபொல

குருநாகல் மாவட்டம்:

ரிதிகம
மல்லவப்பிட்டிய
மாவத்தகம

மாத்தளை மாவட்டம்:

நாவுல
ரத்தோட்டை
அம்பங்கங்க கோரல
உக்குவளை
வில்கமுவ
யட்டவத்தை
மாத்தளை
பல்லேபொல
லக்கல பல்லேகம

எச்சரிக்கை மட்டம் 2 – அவதானத்துடன் இருங்கள் (அம்பர்)

பதுளை மாவட்டம்:

பதுளை
ஹப்புத்தளை
ஹாலிஎல
கந்தகெட்டிய
பசறை
மீகஹகிவுல
ஊவா பரணகம
வெலிமடை
லுணுகலை
எல்ல
பண்டாரவளை
சொரணத்தோட்டை
ஹல்துமுல்ல

கேகாலை மாவட்டம்:

தெஹியோவிட்ட
தெரணிகலை
ருவன்வெல்ல
கேகாலை

குருநாகல் மாவட்டம்:

பொல்கஹவெல
அலவ்வ

நுவரெலியா மாவட்டம்:

நுவரெலியா
அம்பகமுவ கோரல
தலவாக்கலை
நோர்வுட்
கொத்மலை மேற்கு
கொத்மலை கிழக்கு
வலப்பனை
ஹங்குரான்கெத்த
நில்தண்டஹின்ன
மத்துரட்ட

இரத்தினபுரி மாவட்டம்:

கஹவத்தை
கொடகவெல
கொலொன்ன

எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் இருங்கள் (மஞ்சள்)

கம்பஹா மாவட்டம்:

அத்தனகல்ல
திவுலப்பிட்டிய
மீரிகம

குருநாகல் மாவட்டம்:

நாரம்மல

இரத்தினபுரி மாவட்டம்:

கிரியெல்ல
இரத்தினபுரி
எஹெலியகொடை
குறுவிட்ட
எலபாத்த
அயகம
பலாங்கொடை
கலவானை
இம்புல்பே
நிவித்திகல
ஓப்பநாயக்க
பெல்மதுளை
கல்தோட்டை

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply