அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில்,

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை (Red Crescent) குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை ஆரம்பித்துள்ளன என்றும், அந்த அமைப்புகள் ஊடாக வழங்கப்படும் 5 இலட்சம் யூரோக்களும் இந்த மனிதாபிமான உதவித் தொகையில் உள்ளடங்குவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பலத்தையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply