முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி, காருடன் மோதி விபத்து!

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி, மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் சப்புகஸ்கந்த, தெனிமல்ல பகுதியில் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது காரில் பயணித்த 25 வயதுடைய பெண், அவரது 6 மாதக் குழந்தை மற்றும் 55 வயதுடைய பாட்டி ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 6 மாதக் குழந்தை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான ஜீப் மற்றும் காருடன், சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சப்புகஸ்கந்த பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply