யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம்!

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் இன்றையதினம் (12) காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் முன்பாகப் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இலங்கையின், குறிப்பாக வடக்குக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து இழுவைப் படகு மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே வடக்கு மீனவ அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அரசாங்கம் இது தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமது கடல் வளங்கள் சூறையாடப்படுவதாகவும், தமது வாழ்வாதாரம் முடக்கப்படுவதாகவும் தெரிவித்த மீனவர்கள், அதற்கான நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு கோரி நூற்றுக்கணக்கானோர் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply